இத்தாலி பிரதமர் மரியோ திராகி ஐ.நா. மூலம் ஜி-20 நாடுகள் ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க இத்தாலி தலைமையில் ஜி-20 நாடுகளின் அவசர மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றுள்ளது. அதில் பிற நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது, ராணுவம் மூலம் தலையிடுவது, ஒருவரது சித்தாந்தங்களை மற்றொருவர் மீது திணிப்பது உள்ளிட்டவை நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி யி கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் தான் அந்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.