Categories
தேசிய செய்திகள்

திருமணமாகாத விரக்தி… சரக்குக்கு சைடிஸாக மாறிய விஷம்… இளைஞரின் விபரீத முடிவால் தவிக்கும் பெற்றோர்கள்…!!!

வில்லியனூரை அடுத்த பெருங்களுரை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவருடைய மகன் தெய்வநாயகம். 28 வயதாகும் இவர் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்த தெய்வநாயகம் வாரம் ஒருமுறை வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 ஆம் தேதி அவர் வீட்டிற்கு செல்ல வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தெய்வ நாயகத்தை பல இடங்களில் தேடி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை கரிக்கலாம்பாக்கம்-பாகூர் சாலையில் தெய்வநாயகம் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் தெய்வநாயகத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தெய்வநாயகம் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |