Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த தகவல்…. ஏமாற்றத்தை உணர்ந்த என்ஜினீயர்…. போலீஸ் விசாரணை….!!

ஆன்லைன் விளையாட்டின் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரத்தில் ஜெரால்டு என்பவர் வசித்து வருகின்றார். இவர் என்ஜினீயராக இருக்கின்றார். இவருடைய செல்போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வீட்டில் இருந்து பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் பெறலாம் என தகவல் வந்தது. அந்த தகவலை ஜெரால்டு பார்த்தபோது ஒரு தொடர்பு வாட்ஸ்-அப் எண்ணிற்கு சென்றது. இதனையடுத்து தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது. அப்போது அதிலிருந்து வந்த ஒரு தகவலின்படி ஜெரால்டு தனது செல்போன் எண்ணை அளித்து பதிவு செய்தார்.

அதன்பின் வந்த ஆன்லைன் விளையாட்டில் இணையவழியில் பண பரிவர்த்தனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 2 முறை இணைய வழியில் பரிவர்த்தனை செய்த தொகை ஜெரால்டுக்கு திரும்பி வந்தது. ஆனால் 3-வது முறையாக செலுத்திய 93 ஆயிரத்து 958 ரூபாய் ஜெரால்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து ஜெரால்டு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது 4-வது முறை விளையாட வேண்டும் என தகவல் வந்தது.

அதில் கேட்கப்பட்ட தொகை லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருந்ததால் இது ஏமாற்று வேலை என்பதை ஜெரால்டு உணர்ந்தார். ஆகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஜெரால்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி உத்தரவின்படி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |