Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய நெல் கொள்முதல் நிலையம்… திறந்து வைத்த எம்.எல்.ஏக்கள்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கூடலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் கோடை, சம்பா என இரண்டு போக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் கம்பம் எம்.எல்.ஏ மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் எம்.எல்.ஏ  ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது கூடலூர் எருக்கங்காடுகளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதனை கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜன் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி ஆணையர் சேகர், திமுக நகர செயலாளர் லோகன் துரை, அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்று உள்ளனர். இதனை தொடர்ந்து வேளாண்மை அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏ ரகம் நெல் 100 கிலோவிற்கு 2,060 ரூபாய்க்கும், பொதுரகம் நெல் 2,015 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

Categories

Tech |