பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் சில போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு பரிச்சயபட்டவர்கள். மேலும் ஒரு சிலரை இந்த நிகழ்ச்சியில் மக்கள் புதிதாக காண்கின்றனர்.
அதன்படி மக்களுக்கு அறிமுகம் இல்லாத போட்டியாளர்களாக இருப்பவர் தான் அக்ஷரா ரெட்டி . பிக்பாஸில் நேற்றைய எபிசோடில் இவர் கடந்து வந்த பாதை டாஸ்கில் தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸுக்கு முன் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் அக்ஷரா ரெட்டி கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி Villa to Village என்ற நிகழ்ச்சியில் தான் அக்ஷரா பங்கேற்றிருக்கிறார்.