அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமையில் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா சம்பந்தமான கட்டுப்பாடுகள் இந்த மாதம் 31ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் நேற்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது
அப்போது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனுமதி வழங்கப்படலாம் என்ற நிலையில் தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது.. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை கோவில்கள் திறக்கப்பட வேண்டும் என பக்தர்கள், பாஜக கூறிவந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.