Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. திருட முயன்ற வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியிடம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இலந்தைகுளம் பகுதியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கூடலில் இருந்து வீரவநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழுதூர் பகுதியில் வசிக்கும் பேச்சிமுத்து என்பவர் அந்தோணியம்மாள் கூடையில் இருந்த மணி பர்சை திருடிக் கொண்டு அவரை அவதூறாக பேசி மிரட்டினார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகில் வந்ததும் பேச்சிமுத்து மணி பர்சை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்தோணியம்மாள் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேச்சிமுத்துவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |