Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

எந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் புரளும்… முழு ராசி பலன் அறிய..!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : 

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபார காரியங்களில் மட்டும் சின்ன சின்ன தடைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும் எதிர்பார்த்த நிதி நிலை இன்று உயரும் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை காணப்படும்.

இன்று பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சிகரமான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியே செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

ரிஷபம் : 

ரிஷபம் ராசி அன்பர்களே..!! நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகளை முடிப்பதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் புத்தி கூர்மையுடன் செயல்படுங்கள்.

அது போதும். எதிர்ப்புகள் விலகி செல்லும். இன்று காரியத்தில்  இருந்த தடைகளும் விலகி செல்லும். இன்று அக்கம் பக்கத்தினர் உங்களை அன்பு பாராட்டக் கூடும். இன்றைய நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் :

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியமும் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உழைப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று பிரச்சினைகள் தலைதூக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். கவனமாக பேசுங்கள்.

குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெற கூடும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அதுபோலவே நீங்கள் வெளியே செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். அதுபோலவே கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

கடகம் : 

கடகம் ராசி அன்பர்களே.!! இன்று ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடுகின்ற தே என்ற கவலை மேலோங்கும். இன்று காரிய தடைகள் விலகி ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது ஓரளவுதான் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் அதற்கேற்ற செலவு இருப்பதால் கவலை உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லக் கூடும். வெளிநபர்கள் குறை சொல்லக் கூடும். எனவே வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

எந்த ஒரு விஷயத்தையும் கண்டும் காணாமல் செல்வது நன்மை கொடுக்கும். அதுபோலவே வாக்குவாதங்கள் நடக்கக் கூடிய இடத்தில் தயவு செய்து நீங்கள் நிற்க வேண்டாம். அது போலவே யாருக்கும் நீங்கள் பஞ்சாயத்துக்கள் ஏதும் பண்ண வேண்டாம். வாக்குறுதிகளையும் இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று வெளியிடங்களுக்கு நீங்கள் செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை  அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

சிம்மம் : 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கவனிக்காது விட்ட உடல்நலத்தில் கவலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் நலனை தயவு செய்து பாருங்கள். சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை மட்டுமே சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் வந்த பிரச்சினை அகலும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்ப்பு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். பணியில் மிகத் துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

இன்று மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிக்கவேண்டும். படிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். அது போலவே இன்று நீங்கள் வெளியே செல்லும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் கைக்குட்டையை வைத்து எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கும். இதன் மூலம் நீங்கள் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6#

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கன்னி : 

கன்னிராசி அன்பர்களே..!! அரைகுறையாக நின்ற பணி முடிவடையும் நாளாக இருக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவார்கள். சிக்கனத்தை அறிவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் கவனமாக செயல்படுவது நல்லது.

இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டியிருக்கும். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். கூடுமானவரை பச்சை நிறத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வரும். அது மட்டும் இல்லை இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

துலாம் : 

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஊக்கத்தோடும்  உற்சாகத்தோடும்  பணிபுரிவீர்கள். விவாதப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பாடத்தை படியுங்கள். கவனம் சிதற விடாமல் படியுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை இருக்கும். இனிமையான செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இருந்தாலும் தொழிலுக்காக புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதுபோலவே வேலை இல்லாதவர்களுக்கு வேலை உத்தரவாத கடிதமும் இன்று வரக்கூடும். ஏற்றுமதி துறை பங்குச் சந்தை போன்றவற்றில் நல்ல லாபம் இன்று கிடைக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறஆடை  அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் : 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளரிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. சக மாணவர்களிடம் பழகும்போது கொஞ்சம் பொறுமையாக  நிதானமாக பழகுங்கள். வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். இன்று  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக உள்ளது. அது போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும். கர்ம  தோஷங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு : 

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சகோதரர் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் விலகிச்செல்லும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். இன்று தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். நீங்களும் மற்றவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்க கூடிய திறமையும் மேலோங்கும். உங்கள் பணிகளில் யார் குறுக்கே வந்தாலும் அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.  அது மட்டுமில்லை நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் புதியதாக மாற்றங்கள் நிகழும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

மகரம் : 

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று எதிர்பார்த்த படி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமைய கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக செயல் படுவது நல்லது. வாடிக்கையாளரை அனுசரித்து செல்வதும் நல்லது. வியாபாரத்தில்  இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

இன்று மாணவர்கள் சக மாணவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கல்வியில் முன்னேற்ற வாய்ப்புகள் கிட்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. படித்த பாடங்களை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

கும்பம் : 

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வியாபார விரோதம் விலகிச்செல்லும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள முன்வருவீர்கள். இன்று காரியத்தடைகள் மனக்குழப்பம் டென்சன் போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவை பற்றி கவலை வேண்டாம். நல்லபடியாகவே வந்து சேரும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. பாடங்களை மிக கவனமாக படிப்பது நல்லது. புதிய முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று மனம் மகிழ்ச்சி பெறுவதற்கு இறைவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அது போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

மீனம் : 

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களின் உதவிக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வது தொழிலில் சில மாற்றங்களை செய்யும். எண்ணம் மேலோங்கும். இன்று பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகத்தான் இருக்கும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருங்கள். அது போதும். அக்கம்பக்கத்தினர் இடம் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படகூடும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் பொழுது கவனமாக ஈடுபடுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது போலவே நீண்ட நாட்களாக வரவேண்டிய தொகை உங்களுக்கு வந்து சேரும். இன்று பணப்புழக்கம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இன்று கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடையுடன் செல்லுங்கள். அனைத்து விஷயமும் நல்லபடியாக  நடக்கும். இல்லையேல் வெள்ளை நிறத்தில் கைக்குட்டையாவது எடுத்து செல்லுங்கள். அதேபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை  தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |