நவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் விரதமிருந்து பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதியில் பொதுமக்கள் பூஜைப் பொருட்களான அவல், பொரிகடலை, சந்தனம், குங்குமம் மற்றும் சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.
மேலும் மாலைகள் பூக்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நெல்லை சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட்டில் குவிந்த காணப்பட்டனர். இதனால் நெல்லையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மல்லிகை பூ விலை ஒரு கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரையும், பிச்சிப்பூ ரூ.800 முதல் ரூ.1000 வரையும் விற்பனையானது. இதேபோல் கனகாம்பரம் ரூ.1000 மேல் விற்பனை செய்யப்பட்டது. இது தவிர சம்பங்கி, ரோஸ் பூ, செவ்வந்தி பூக்களும் நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது.