ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணியதில் 29 லட்சம் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டுள்ளது.
அப்போது கோவிலின் செயல் அலுவலர் ரமேஷ், உதவி ஆணையாளர் தமிழரசு, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி, ஆய்வாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் உண்டியலில் மொத்தம் 28,92,750 ரூபாய் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நரசிம்மர் சுவாமி கோவில் உண்டியலில் 2,01,647 ரூபாயும், 15 கிராம் தங்கமும் ,100 கிராம் வெள்ளியும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.