Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! கருத்து வேறுபாடு உண்டாகும்..! அனுசரணை தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். ஆரோக்யம் சீராக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |