தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கும் பல்வேறு வழிபாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ரயிலில் பயணம் செய்தவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதால் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை ரயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் விதி மீறலில் ஈடுபட்ட பயணிகளிடமிருந்துரூ. 35.4 கோடிவசூலிக்கப்பட்டுள்ளது . மேலும் இதில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1.63 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.