தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வர இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு ஊடரங்கு தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்துவிதமான கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1 முதல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் கள் நடத்தலாம்.மேலும் பண்டிகை காலத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.