Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 செலுத்தினால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பென்ஷன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

அனைவரும் ஓய்வு காலத்தில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ்வதற்காக பென்ஷன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் அமைப்புசாரா துறை சார்ந்தவர்களுக்கு ஒரு சிறந்த பென்ஷன் திட்டம் உள்ளது. அது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பயனாளியின் 60 வயதிற்குப் பிறகு இந்த உதவித்தொகை கிடைக்கும்.

இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அதன்படி மாத வருமானம் 15,000 ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. பிஎஃப் அமைப்பு மற்றும் தேசிய பென்ஷன் திட்டம் போன்ற திட்டங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பொது சேவை மையத்தை அணுகினால் மட்டுமே போதும். இந்தத் திட்டத்தில் 18 வயது நிரம்பிய ஒருவர் தனது 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் வாங்க வேண்டுமென்றால் அவர் தற்போதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.

அதனைப்போலவே 29 வயதில் இணைந்தால் 100 ரூபாயும், 40 வயதில் இணைந்தால் 200 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதில் இணைவதற்கு ஆதார் கார்டு மற்றும் ஜன் தன் வங்கி கணக்கு ஆகிய இரண்டும் தேவைப்படும். மொபைல் நம்பரும் அவசியம். இது குறித்து மேலும் கூடுதல் விவரங்களுக்கு 18002676888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |