தேர்தல் முடிவு வெளியிட்டதில் தவறு இருப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இதயத்துல்லா உள்பட மொத்தமாக ஆறு நபர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இதயத்துல்லா மற்றும் பஷீர் ஆகிய 2 பேருக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்துள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையில் இதயத்துல்லா மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத பஷீர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து பஷீர் தனது ஆதரவாளர்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். அதில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கோஷம் எழுப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்ட கட்சினர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.