இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதில் மார்க்கெட் விலையை விட மிக கம்மியான விலைக்கு சொத்துக்களை வாங்க முடியும். அதன்படி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் இந்த மெகா ஆன்லைன் விற்பனை நடைபெற உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சொத்துக்களை வைத்து கடன் வாங்கிவிட்டு சரியாக திருப்பி செலுத்தாத அவர்களின் சொத்து மற்றும் வீடுகளை எஸ்பிஐ வங்கி ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது. அவ்வாறு நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதாகவும் அதனை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை வாங்குவோருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதனால் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏலத்தில் பங்கேற்க தேவையானவை:
1. சொத்துக்கான EMD
2. KYC ஆவணங்கள்
3. டிஜிட்டல் கையொப்பம்
4. இமெயில் வாயிலாக Login ID மற்றும் password அனுப்பி வைக்கப்படும்.
5. ஏல நேரத்தில் Log in செய்து விருப்பமான சொத்து மீது bid செய்யலாம்.