தமிழகத்தில் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவு முக்கியமான ஒன்று. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்படும். ஒருமுறை பதிவு செய்தால் போதும். அதன் பிறகு 12 மற்றும் டிகிரி என ஒவ்வொரு படிப்பிற்கும் renewal செய்தால் மட்டுமே போதும். இந்தப் பதிவு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் மாணவர்களின் சிரமத்தை போக்க 2009ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் அவர்களது 10வது முடித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளுமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் குறித்த நாட்களில் வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கும் போது வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று கொண்டு வருமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 4ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.