மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியமும் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உழைப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று பிரச்சினைகள் தலைதூக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். கவனமாக பேசுங்கள். குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.
தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெற கூடும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அதுபோலவே நீங்கள் வெளியே செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். அதுபோலவே கர்ம தோஷங்களும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்