Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-பேருந்து மோதல்…. உடல் நசுங்கி பலியான பெண்கள்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த ஆட்டோவை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் புறையூர் வளைவில் சென்று கொண்டிருந்தபோது காயல்பட்டினம் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஆட்டோ மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் அமுதா மற்றும் மாரி செல்வி என்ற 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

அதன்பிறகு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உயிரிழந்த 2 பெண்களின்சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |