Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள்”… வாக்குறுதி கொடுக்க வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே.!! இன்று ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடுகின்ற தே என்ற கவலை மேலோங்கும். இன்று காரிய தடைகள் விலகி ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது ஓரளவுதான் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் அதற்கேற்ற செலவு இருப்பதால் கவலை உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லக் கூடும். வெளிநபர்கள் குறை சொல்லக் கூடும். எனவே வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் கண்டும் காணாமல் செல்வது நன்மை கொடுக்கும்.

அதுபோலவே வாக்குவாதங்கள் நடக்கக் கூடிய இடத்தில் தயவு செய்து நீங்கள் நிற்க வேண்டாம். அது போலவே யாருக்கும் நீங்கள் பஞ்சாயத்துக்கள் ஏதும் பண்ண வேண்டாம். வாக்குறுதிகளையும் இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று வெளியிடங்களுக்கு நீங்கள் செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை  அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |