Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “இன்று நல்ல சம்பவங்கள் நடைபெறும்”… புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஊக்கத்தோடும்  உற்சாகத்தோடும்  பணிபுரிவீர்கள். விவாதப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பாடத்தை படியுங்கள். கவனம் சிதற விடாமல் படியுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை இருக்கும். இனிமையான செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இருந்தாலும் தொழிலுக்காக புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதுபோலவே வேலை இல்லாதவர்களுக்கு வேலை உத்தரவாத கடிதமும் இன்று வரக்கூடும். ஏற்றுமதி துறை பங்குச் சந்தை போன்றவற்றில் நல்ல லாபம் இன்று கிடைக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறஆடை  அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |