13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தூசி கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நல பாதிப்பால் அவதியடைந்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி அச்சத்தில் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி விசாரணை நடத்தி அருள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.