Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வையாபுரிபட்டி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் விக்னேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தயாநிதி தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் தயாநிதிக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மகன் விக்னேஸ்வரன் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தயாநிதியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே தயாநிதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |