சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் பூங்கா ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் பழனி குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வத்தை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 51 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.3,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.