விவசாயி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள்புதூர் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மீனாட்சி கோபமடைந்து தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் வீட்டில் கருப்புசாமி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய வீட்டு முன்பு கருப்புசாமி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பழனி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்புசாமியின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருப்புசாமியை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.