தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெறும் பயனாளிகளிடம் இருந்து வங்கி முகவர்கள் பணம் பெறக்கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளி, விதவையர், விவசாய தொழிலாளர், ஏழை விவசாயி, கணவனால் கைவிடப் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு அரசு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் பயனாளிகளுக்கு வங்கி முகவர்கள் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் உதவி தொகையை வழங்குகின்றன.
இந்த உதவித்தொகையை பயனாளிக்கு வழங்க வங்கி முகவர்கள் பணம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் அரசு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளிடமிருந்து பணம் வாங்க கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, வங்கி முகவர்களுக்கு, பயனாளிகள் பணம் கொடுக்க தேவையில்லை.
அதனையும் மீறி பணம் கேட்டு வங்கி முகவர்கள் வற்புறுத்தினால் வங்கி மேலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரகதிடம் பயனாளிகள் புகார் அளிக்க வேண்டும். மேலும் 1800-425-1090 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.