தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அனைத்து நாட்களும் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநில பாஜக தலைவர் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது.
பாஜகவின் கோரிக்கையை ஏற்று கோயிலைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். முன்னதாக தமிழகத்தில் மதமாற்றத்திற்காக வேண்டும் என்றே அரசு கோவில்களை மூடியுள்ளதாகவும், இந்துக்களுக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுவதாகவும் கோயிலின் முன்பு பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.