Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்வயரில் சிக்கிய மரங்கள்…. அடுத்தடுத்து சாய்ந்த மின்கம்பங்கள்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்….!!

டிராக்டர் மோதியதில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அழகாபுரியில் இருந்து ஒரு டிராக்டர் மரங்களை ஏற்றிக்கொண்டு மாரம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரை பெருமாள் கோவில்பட்டியில் வசிக்கும் பால்ராஜ் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் வேடசந்தூர் மாரம்பாடி சாலையில் பேரூராட்சி குப்பைக்கிடங்கு அருகில் வந்து கொண்டிருந்த போது டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த மரங்கள் அந்த வழியாக சென்ற மின் வயரில் சிக்கியது. இதனால் அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த 5 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து கீழே விழுந்துள்ளன. இதனை பார்த்த டிரைவர் உடனடியாக டிராக்டரை நிறுத்திவிட்டார்.

இதற்கிடையில் அந்த வழியாக வந்த வாகனங்களில் வந்தவர்கள், நடந்து சென்றவர்கள் ஆகியோர் சாலையில் மின்கம்பங்கள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் அங்கிருந்து ஓடினர். இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் அவர்கள் இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |