கோவில் நகைகளை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதிபாளையத்தில் மாகாளியம்மன் என்ற கோவிலில் மணிராஜ் என்பவர் 8 வருடமாக பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு வந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது கருவறையில் உள்ள பீரோல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பீரோவில் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளைடிக்கப்பட்டிருந்தது.
இயந்த சம்பவம் குறித்து நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோவில் நகைகளை கொள்ளையடித்த நபர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான தேவேந்திரன் மற்றும் விருமாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.