Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முடிவுகளை மாற்றி அறிவித்த அலுவலர்கள்…. ஆதரவாளர்கள் போராட்டம்…. கலெக்டருக்கு மனு….!!

முடிவுகளை மாற்றி அறிவித்ததால் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் மூலக்காடு உள்பட 7-க்கும் அதிகமான துணை கிராமங்கள் இருக்கின்றது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் சின்னகண்ணு உள்பட 4 பேர் போட்டியிட்டனர். இவற்றின் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்தது 25 வாக்கு வித்தியாசத்தில் மகேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

இருப்பினும் ஒரு மணி நேரத்திற்குப் பின் சின்னகண்ணு வெற்றி பெற்றதாகவும், மகேஸ்வரி தோல்வி அடைந்ததாகவும் தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த மகேஸ்வரியின் ஆதரவாளர்கள் 50-க்கும் அதிகமானவர்கள் அதிக வாக்குகள் பெற்ற மகேஸ்வரியை வெற்றி பெற்றதாக அறிவித்து சான்று வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததால் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |