விபத்தில் சிக்கியவரின் பணத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிந்த நாயக்கன்பட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பாண்டியன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாஸ்கரன், உதவியாளர் பூபதி ராஜா போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனை மீட்டனர்.
அப்போது விபத்து நடந்த இடத்தில் கடந்த 30 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன், ரேஷன் கார்டு, ஆதார் போன்றவற்றை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீட்டுள்ளார். இதனையடுத்து பாண்டியனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாண்டியனின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் பாஸ்கரன் மற்றும் பூபதி ராஜா ஆகியோர் பணத்தையும், ஆவணங்களை ஒப்படைத்து விட்டனர்.