Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த 15 ஆடுகள்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

அரிசியில் குருணை மருந்தை கலந்து ஆடுகளை கொன்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் இருக்கும் திடலில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகள் திடீரென இறந்து விட்டது. இந்நிலையில் அதே திடலில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இது குறித்து அறிந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலுக்கு சென்று பார்த்தபோது அரிசியில் குருணை மருந்தை கலந்து  மர்ம நபர்கள் ஆட்டிற்கு தீவனமாக வைத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |