Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கலாபவன் மணி” இடத்தை நிரப்ப வரும் டினி டாம்..!!

நடிகர் ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ஆபரேஷன் அரபைமா படத்தில் நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார்.

முன்னாள் கடற்படை வீரரும் இயக்குநருமான ப்ராஷ் இயக்கும் படம் ‘ஆபரேஷன் அரபைமா’. இதில் நடிகர் ரகுமான் நடிக்கிறார். நாடோடிகள் அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக டினி டாம் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில், ‘பஞ்ச பாண்டவர்’, ‘பட்டாளம்’, ‘பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட்’, ‘இன்டியன் ருபி’, ‘பியூட்டிஃபுல்’, ‘ஸ்பிரிட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Image result for tini tom arapaima

தமிழ் சினிமாவில் கலக்கிய “கலாபவன் மணி”யைப்போலவே கலாபவனிலிருந்து வரும் இவர் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். ‘ஆபரேஷன் அரபைமா’ படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Categories

Tech |