குற்றவாளியை குண்டர்ச் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் சக்திவேலை குண்டர்ச் சட்டத்தில் கீழாக கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை விடுத்துள்ளார்.
அதன்படி கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா குற்றவாளியான சக்திவேலை குண்டர்ச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குண்டர்ச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை காவல்துறையினர் சிறையிலிருக்கும் சக்திவேலிடம் வழங்கியுள்ளனர்.