Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. அதிகாரிகளின் அலட்சியம்…. வருத்தத்தில் விவசாயிகள்….!!

தொடர்ந்து பெய்த கன மழையில் நனைந்த நெல்கள் முளைப்பதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள அரியராவி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அனைத்து பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசு சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்பின் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்து தார்ப்பாய் மூலமாக சுற்றிலும் மூடி திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென கனமழை பெய்ததால் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. பின்னர் மூட்டைகளில் வைத்திருக்கும் நெல்கள் அனைத்தும் முளைக்க ஆரம்பித்ததை கண்டு விவசாயிகள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது, நாங்கள் மூன்று மாதம் இரவு மற்றும் பகல் கஷ்டப்பட்டு விளைவித்து அறுவடை செய்ததை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தங்களின் கண் முன்னாடியே முளைத்து வீணாகி வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |