Categories
அரசியல்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு…. எந்த கட்சிக்கும் வெற்றி இல்லை…. அமைச்சர் சேகர் பாபு…!!!

வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இதனால் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர்ஹெச் .ராஜா ஆகியோர் இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி,என்றும்  அதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் திறப்பு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது எந்தவொரு கட்சிக்கும் வெற்றி கிடையாது. பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |