Categories
உலக செய்திகள்

‘அலுமினியம் பிரித்தெடுக்கலாம்’…. தோண்டியெடுக்கப்பட்டுள்ள கனிமம்…. புவியியலாளர்கள் தகவல்….!!

கீரின்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள கனிமதத்திலிருந்து அலுமினியத்தை எளிதில் பிரிக்க முடியும் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்தில் அனார்தொஸைட் என்னும் கனிமம் ஆராய்ச்சியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கனிமம் காலநிலை மாற்ற பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று சுரங்க நிறுவனம் நம்பிக்கை அளித்துள்ளது. குறிப்பாக நாசாவின் அப்போலோ விண்கலம் நிலவிலிருந்து கொண்டுவந்த கனிமம் போன்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கனிமமானது பூமி தோன்றிய காலக்கட்டத்தில் இருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சுற்றுப்புற சூழலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளனர். இதிலிருந்து அலுமினியத்தை  எளிதாக பிரித்தெடுக்க முடியும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்சைட்டில் இருந்து அலுமினியத்தை பிரித்தெடுப்பதற்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |