Categories
அரசியல்

சோர்வடையாதீங்க…! வெகுண்டெழுவோம்…. அடுத்து நம் ஆட்சி தான்…. எஸ்.வேலுமணி ஸ்பீச்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக விற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளில் 138 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். அதிமுகவிற்கு இரண்டு தான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எஸ் பி வேலுமணி எம்எல்ஏ, “தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் திமுக ஆட்சிக்கு வந்து அதன்பிறகு வரும் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால் அதிமுக பலமாக உள்ளது. துணிவோடு இனிவரும் தேர்தலை சந்திப்போம். எப்படியும் அறிவித்த வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றப் போவதில்லை. நீட் தேர்வை அவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா? ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக பல நாடகங்களை நடத்தி வருகின்றனர். எனவே யாரும் சோர்வடைய வேண்டாம். மீண்டும் வெகுண்டெழுவோம். அடுத்து அமையப் போவது அதிமுக ஆட்சிதான்” என்று கூறினார்.

Categories

Tech |