Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனடி அமல்…. காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.102.40- க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசு அதிகரித்து ரூ.98.26- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |