தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் குறிப்பாக இருபத்தொரு வயது பெண்ணான சாருகலாவும், தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாளும் அதிகளவில் பேசப்பட்டனர். 90 வயதான பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்கச் செய்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொறியியல் பட்டதாரியான இருபத்தொரு வயது சாருகலா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சாருகலா, எங்களுடைய கிராமத்தில் மக்களின் அன்றாட தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே நான் பொறுப்பேற்ற இன்னும் ஆறு மாதத்தில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்று கூறினார். மேலும் என்னுடைய ரோல் மாடல் என்னுடைய இன்ஸ்பிரேஷன் கலைஞர் ஐயா தான் அவர் வழியில் நடந்து சமத்துவமாக இருப்போம் என்று கூறியுள்ளார்.