ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஏமன் படைகள் சவுதியுடன் கூட்டணி சேர்ந்து ஹவுதி அமைப்பினர் மீது தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் கடந்த 24 மணிநேரத்தில் 19 ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கூட்டுப்படை சார்பில், இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகவே முன்னெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 134 பேர் கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏமன் அரசுக்கு சவுதி அரசு 6 ஆண்டு காலமாக உதவி வருகிறது.