நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவர் கி. வீரலட்சுமி அறிவித்தது போல போஸ்டர் ஒன்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை சகோதரி விஜயலட்சுமிக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த போகிறேன் என வீரலட்சுமி அறிவித்துள்ளார்.விஜயலட்சுமிக்கு நீதி கேட்டு நவம்பர் 27ஆம் தேதியன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தம்பிகள் ஒரு கை பார்த்து விடலாம் என்று தயாராக தொடங்கினார்.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் போராட்டத்தை திரும்பப் பெறுகிறேன் என்று விஜயலட்சுமி அறிவித்துள்ளார். இதனால் போராட்டம் கிடையாது என தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவர் மற்றொரு போராட்டத்தை சீமானுக்கு எதிராக எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.