நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் தேர்வு குறித்த அறிவிப்பும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுக்கான அட்டவணை அக்டோபர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. Objective type- இல் இந்தத் தேர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு பாட பிரிவுக்கும் 90 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். மேலும் நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவ பொதுத்தேர்வு நவம்பரில் தொடங்கும். 4 முதல் 8 வார கால இடைவெளியில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.