நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி இல்லாத சிரீஞ்சை லேசர் தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி இல்லாத சிரீஞ்சை லேசர் தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நோயாளிகள் மீது சீரிஞ்சில் ஏற்றப்படும் மருந்தினை தெளிக்கும் போது ஏற்கனவே மில்லி செகண்டில் சூடாகி நீர்குமிழியாக மாறியிருக்கும் அந்த மருந்து மனிதர்களின் தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலுக்குள் சென்று செயலாற்றும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டிற்கு அடுத்த 3 ஆண்டுகளில் வந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் இந்த சிரீஞ்ச் செலுத்தி கொள்பவர்களுக்கு குறைந்த அளவிலான வலியே அதாவது கொசு கடியை விட மிகக்குறைந்த அளவிலான உணர்ச்சியை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பு மருந்து கழிவுகளை குறைக்கும் விதமாகவும், வலிக்கும் என்ற பயத்தில் ஊசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களுகாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.