Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறப்பு தள்ளுபடி…. முதலில் வரும் 3,000 பேருக்கு ரூ.50- க்கு புடவை…. அலைமோதிய கூட்டம்….!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. மேலும் மக்களை கவர்வதற்காகவும் வாடிக்கையாளர்களிடம் விளம்பரத்திற்காகவும் அந்தக் கடையில ஒரு நோட்டீஸ் அடித்து மக்கள் பார்க்கும் இடத்தில் அதனை ஒட்டி, மக்களிடம் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீஸில் கடை திறப்பு நாளில் முதலில் வரும் 3,000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதையடுத்து இந்த விளம்பரம் தென்காசி மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் அந்த ஜவுளிக்கடையில் திரண்டனர். அதிகாலையிலே நிறைய பெண்கள் பலர் அதிக புடவைகளை வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடையில் குவிந்ததால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு உருவாகியது.

மேலும் அவர்கள் கொரோனா நடவடிக்கை விதிகளை பின்பற்றாமல் விதிகளை மீறி உள்ளார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட நிர்வாகம் கடை உரிமையாளருக்கு ரூ. 10,000 அபராதமும் விதித்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |