கொரோனா தொற்றினால் கை,கால்களை இழந்த பெண் குறித்து மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் அதிகமாக பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல் தான். மேலும் தொற்றின் காரணமாக மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடந்து கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழியாக தடுப்பூசி செலுத்தும் முறை உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள Tennessee நகரில் இருக்கும் Nashville-வைச் சேர்ந்த மருத்துவர் Wesley Ely என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கொரோனா தொற்று எவ்வளவு ஆபத்தானது. அதனால் ஒரு பெண் கை மற்றும் கால்களை இழந்து எப்படி அவதிப்படுகிறார் என்பதை காட்டியுள்ளார். குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த பதிவு குறித்து அவர் கூறியதில் “32 வயதான பெண் ஒருவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய கதை மூலமாக தெரிந்து கொள்ளட்டும் என்று என்னிடம் மன்றாடி கேட்ட பின்னர் நான் இதை பதிவிட்டுள்ளேன்.
🎥 #COVID19 took her hands & feet👇
I cried when she sent me this yesterday: Her physical resilience & mental fortitude are my #Inspiration. She sent this 🎥 of her walking w new legs and said to tell YOU…
“Blood clots of #COVID can be prevented w a #Vaccine!”
(shown w perm) https://t.co/ouoMFhy0JH pic.twitter.com/gZ9n0FcV8V
— WesElyMD (@WesElyMD) October 12, 2021
இந்த காணொளியை அந்த பெண் தான் எனக்கு அனுப்பி வைத்தாள். நான் இதை கண்டவுடன் கண்ணீர் வந்துவிட்டது. அவள் தற்பொழுது புதிய செயற்கை காலுடன் நடந்து வருகிறார். முக்கியமாக கொரோனா என்பது நுரையீரல், இதயம், மூளை போன்ற நமது உள்ளுறுப்புகளை பாதிக்கும் ரத்த அடைப்பு நோய் ஆகும். குறிப்பாக ரத்த உறைதல் ஏற்பட்டால் உடல் பாகங்கள் செயலிழந்து விடும். அது போன்று தான் இந்த பெண்ணும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவரின் கை மற்றும் கால்களில் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவரின் உடலில் காயங்கள் உண்டாகியுள்ளது. மேலும் அந்த காயங்களை சரிசெய்ய அவருக்கு பல மணி நேர சிகிச்சைகள் தேவைப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாட்கள் மெதுவாக நகர நகர அவரின் கை மற்றும் கால்களை எடுத்தால் தான் பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது. இதனால் அதனை எடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனை நான் ஆரம்பத்தில் நான் கண்ட பொழுது மிகவும் மனம் கலங்கினேன்.
ஆனால் அவரின் மன மற்றும் உடல் உறுதியும் எனக்கு ஒரு புது உற்சாகத்தை அளித்தது. குறிப்பாக இந்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த பதிவை வெளியிட்டதற்கு முக்கிய காரணமே அனைவரும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் என்பது தான். இல்லை என்றால் இவரை போன்ற நிலைமை அனைவருக்கும் ஏற்பட்டு விடும். எனவே தடுப்பூசியை தயவு செய்து செலுத்திக் கொள்ளுங்கள் அது தான் அனைவருக்கும் நல்லது” என்று கூறியுள்ளார்.