கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் இல்லாத 8843 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் சில ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களை பதவி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 1,110 ஊழியர்கள் மட்டும் பணியாற்றலாம் என்றும் 7, 333 உபரியாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உபரியாக இருக்கின்றவர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவை எதிர்த்து ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்கல்வி சார்பில் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன் மற்றும் அண்ணாமலை பல்கலை சார்பில் வழக்கறிஞர் ஐஸக் மோகன்லால் ஆகியோர் ஆஜராயினர். அதனைத் தொடர்ந்து நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் ஏதும் இல்லாததால் நோட்டீஸ் பரிசீலனை செய்த பின்னர் அதற்கான காரணங்களை கூறி அதிகாரிகள் நிராகரிக்கலாம்.
மேலும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள திட்டத்திற்கு மனுதாரர்கள் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நோட்டீஸில் அனுப்பியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஊழியர்கள் பதிலளிக்க வேண்டும். அதன்பிறகு அண்ணாமலை பல்கலைகழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தகுதி இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.