Categories
அரசியல்

வேடிக்கையா இருக்கே…! பழுத்த பழத்தை…. தன்னால் கீழே விழுந்ததாக சொல்றாங்க…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மற்றும் பாஜக அண்ணாமலை அனைத்து நாட்களும் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநில பாஜக தலைவர் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று கோயிலைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி என்று கூறியிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாக கோயில்கள் திறக்கப்படவில்லை. இது பாஜகவின் வெற்றி என கூற முடியாது. தங்கள் வெற்றி என பாஜக கூறுவது, பழம் கனிந்த சமயத்தில் தடியை வைத்து அடித்து தம்மால் தான் பழம் விழுந்தது என கூறுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |