காஷ்மீரில் தடுப்பூசி முதல் டோஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தியதாக தெரிவித்துள்ளது.