தமிழகத்தில் நடந்த முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கை நழுவ விட்டாலும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பிடித்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மதுரையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்த தோல்வியால் நாம் துவண்டு விடக்கூடாது. விரைவில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் வர இருக்கிறது.
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயாராக இருக்கிறது. அதேபோன்று கூட்டணி கட்சிகள் துணையில்லாமல் திமுக தனித்து போட்டியிட தயாராக இருக்கிறதா ? நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக காசு கொடுத்து வெற்றி பெற்றது என்று கூறினார் . ஏற்கனவே அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிய நிலையில் பாஜக மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து அதிமுக இந்த தேர்தலை சந்தித்தது, ஆனால் பெரிய அளவில் பாஜக வெற்றி பெறவில்லை. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டி என்று அமைச்சர் செல்லூர் ராஜு செல்கிறாரா? அல்லது அதிமுக தலைமை இந்த கருத்தை சொல்கிறதா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.